ரயில்வே பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல், பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையில், ரயில்நிலையங்களை பராமரிப்பது, ரயில் தண்டவாளங்களை பராமரிப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தனியார் வசம் சென்றால் பயணிகளுக்கான ரயில் கட்டணம் 53 விழுக்காடு வரை உயரும் என்றும், பல ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்றும் குற்றம் சாட்டினர்.
Discussion about this post