கொடைக்கானலில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானலில் உள்ள கல்லறைமேடு பகுதியிலிருந்து அண்ணாநகர் செல்லக் கூடிய சாலையின் இரு புறமும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெறும் இடையூறாக இருந்தது.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட முடியாதவகையில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சாலைகளில் வாகனங்களை நிறுத்தியிருந்த வாகன உரிமையாளர்களிடம் அவ்வாறு வாகனங்களை சாலைகளில் நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். வாகனங்களை மீறி நிறுத்தினால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
Discussion about this post