திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகைகள், இன்று முறைப்படி மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் முறைப்படி மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அன்றைய தினம் பதவியேற்காத திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகைகளான மிமி சக்கரபோர்த்தி மற்றும் நஸ்ரத் ஜஹான் ஆகியோர் இன்று முறைப்படி மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேற்கு வங்க மாநிலம் ஜடவ்பூர் தொகுதியிலிருந்து மிமி சக்கரபோர்த்தியும், பசிர்ஹட் தொகுதியிலிருந்து நஸ்ரத் ஜஹானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19-ம் தேதி துருக்கி நாட்டில் நஸ்ரத் ஜஹானுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மிமி சக்கரபோர்த்தியும் துருக்கி நாட்டிற்கு சென்று விட்டதால் இருவரும் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post