மதுரையில் குடிநீர் விநியோகிக்கும் லாரிகளை ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணித்து, முறையான குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி உறுதி செய்து வருகிறது.
மதுரை மாநகராட்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 34 டேங்கர் லாரிகள் மூலமும், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 டிராக்டர்கள் மூலமும் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகிக்கும் லாரிகள் அனைத்திலும் சென்சார் மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
Discussion about this post