முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர், மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
துறை சார்ந்த மானிய கோரிக்கை குறித்து விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, துறை வாரியாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, முக்கிய அறிவிப்புகள் குறித்து முடிவு செய்ய தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். சட்டமன்ற கூட்டத்தொடர், தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள், பேரவையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Discussion about this post