ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்று ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 7-6 ,6-1 என்ற செட் கணக்கில் கோஃபினை வீழ்த்தி பெடரர் பட்டம் பெற்றார்.
பெடரர் பெறும்10-வது ஹாலே பட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொடரில் இரட்டை இலக்க பட்டத்தை வென்ற இரண்டாவது நபர் என்ற சிறப்பை பெடரர் பெற்றுள்ளார்.
Discussion about this post