சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
கோடைக்காலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் சற்று மிதமான சூழல் நிலவுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், சென்னையில், பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, அம்பத்தூர், தாம்பரம் சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம்,செம்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை சுற்றியுள்ள சில பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.
இதேப்போல பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பொன்னேரி , கும்மிடிப்பூண்டி, சோழவரம், பழவேற்காடு சுற்றுவட்டரா பகுதிகளில் ஒருமணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. இதேபோன்று புழல் , செங்குன்றம், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
Discussion about this post