ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மாரந்தை ஊராட்சியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 20 மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமருத்துவம், பல் சிகிச்சை, மகப்பேறு, சித்த வைத்தியம், குழந்தை மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்தனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
Discussion about this post