குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியத்துடன் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டும் என தனியார் ஆலோசனை மைய 10வது ஆண்டு விழா கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழா, சென்னையில் உள்ள உணவகத்தில் நடைபெற்றது. அதில் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா மற்றும் மூத்த வழக்கறிஞர்களான காந்தி, சம்பத், ஆதிலட்சுமி லோகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய வழக்கறிஞர் ஆதிலட்சுமி, மக்களின் குடிநீர்ப்பற்றாக்குறையை தீர்க்க உரிய மாற்று சிந்தனைகள் கொண்டுவரப்படவேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியத்துடன் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
Discussion about this post