சென்னை ஆவடியில் ஜே பி எஸ்டேட் வார்டு பகுதியில், குளத்தை ஒட்டிய சாலையில் உள்ள சாக்கடை அடைப்பை நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியின் எதிரொலியாக பெருநகராட்சியின் சுகாதார துறை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
சென்னை ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட ஜே பி எஸ்டேட் வார்டு பகுதியில் உள்ள 26 தெருக்களில், குளத்தை ஒட்டிய சாலையில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியிருந்தது. இந்த செய்தி நமது நியூஸ் ஜெ செய்தியில் வெளியானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளர் மோகன், இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், ஜே சி பி இயந்திரம் கொண்டு, அடைப்பு ஏற்பட்ட கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் அதிரடியாக ஈடுபட்டனர். மேலும், ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிளும் உள்ள பாதாள கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடவுள்ளனர்.
Discussion about this post