காவலர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் பாதுகாக்கப்பட்டு, முழுமையாக பயன்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், காவலர்கள் ரத்த தான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும், 81 இடங்களில், 13 ஆயிரத்து 868 காவலர்கள் பங்கேற்கும் நிலையில், குறிப்பாக சென்னையில் மட்டும், ஆயிரத்து 200 காவலர்கள் ரத்த தானம் செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ரத்த தானம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் அளிக்கும் ரத்தம், நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மூளைகாய்ச்சல் நோய் பரவக்கூடியது அல்ல என்றும், மூளைக்காய்ச்சல் ஆபத்து தமிழகத்திற்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
Discussion about this post