ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்த வழக்கில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், தப்பியோடியவர்களை கைது செய்துள்ளனர்
விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரிமுத்து என்பவரது நிலத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இந்த நிலையில் நிலத்தில் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததும், அது எதிர்பாராவிதமாக வெடித்ததும் தெரியவந்தது. இவ்விவாகரத்தில், தப்பியோடிய 3 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கோட்டையூரை சார்ந்த கூவப்பாண்டியன் என்பவரையும் தற்போது கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post