தொழிலதிபர் வீட்டில் மசாஜ் செய்ய வந்த பெண், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ் டால்மியா. இவரது மனைவி ராதாவுக்கு, கடந்த 15 வருடங்களாக நரம்பு தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. மருத்துவரின் அறிவுரைப்படி ராதாவுக்கு, மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சவுமியா என்ற பெண், ராதாவுக்கு மசாஜ் செய்து வந்தார். இந்த நிலையில் தினேஷ் டால்மியாவின் வீட்டில் இருந்த வைரக்கற்கள் பதிக்கப்பட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயுள்ளன. இச்சம்பவத்திற்கு பிறகு சவுமியாவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ் டால்மியா புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சவுமியாவை தேடி வருகின்றனர்.
Discussion about this post