ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாக விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உறுப்பினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மன்றத்தின் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சிகள் இல்லாத நேரங்களில் ரஜினி மக்கள் மன்ற கொடியை வாகனங்களில் பறக்க விட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் மக்கள் மன்றத்தில் உறுப்பினர் ஆகலாம் என்றும், 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்றும் மன்றத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாமல், மன்றத்தின் உறுப்பினர்களிடம் பணமோ, பொருளோ பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாதி அமைப்புகளில் உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post