தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், அதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கதிரியல் துறைக்கு கூடுதலாக வாங்கப்பட்டுள்ள சுமார் 4 கோடி மதிப்பிலான அதிநவீன உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். கதிரியல் துறை சார்பாக அமைக்கப்பட்ட உலக தரத்திலான மருத்துவ உபகரணங்களின் கண்காட்சியை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் முழு கட்டமைப்போடு மாணவ, மாணவியருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Discussion about this post