வேலூர் அருகே அரவட்லா மலை கிராமத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குண்டான பணிகள் தொடங்கியுள்ளன.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா, கர்நாடக எல்லையை ஒட்டிய பகுதிகளில் அரவட்லா மலைக்கிராமம் அமைந்துள்ளது. இதனை சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, இங்கிருக்கும் வீரப்ப ஏரி, கடல் அப்பா ஏரி, சமய ஏரி ஆகிய 3 ஏரிகளில், சுற்றுச்சுவர் கட்டி, படகு இல்லம் அமைத்தல், உயர் கோபுர பார்வை தளம் அமைத்தல், மீன் காட்சியகம் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன. இதனால் அரவட்லா பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் வளர்ச்சி பெறும் எனவும், இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த தமிழக அரசுக்கு நன்றி எனவும் ஊர்ப்பொதுமக்கள் தெரிவித்தனர்.
Discussion about this post