ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை செயல்படுத்துவதில் பல அரசியல் பிரச்சனைகள் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகல் ஜோசிக்கு அவர் அனுப்பி இருக்கும் கடிதத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற யோசனை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். 1957 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை அதன் பதவி காலம் முடிவதற்கு முன்னரே கலைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியிருக்கும் சரத் பவார், இந்தியாவின் அரசியல் பன்முகத்தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
ஏராளமான பிராந்திய கட்சிகள் நாட்டின் பல பகுதிகளில் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் பிரகல் ஜோசிக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கூறியிருக்கும் சரத் பவார், இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post