உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 25வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி, மழை காரணமாக, ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களுக்கு நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக், 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் டூப்ளஸிஸ், 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஃபெர்கூஸன் வீசிய பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் குறைவாக இருந்த அந்த அணியின் ரன்ரேட் மேலும் குறைந்தது. ஹசிம் ஆம்லா நிதானமாக ஆடி 55ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மார்க்ரமும் 38 ரன்களில் வெளியேற, தென் ஆப்பிரிக்க அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. வேன் டெர் டூசன் அதிகபட்சமாக 67 ரன்கள் சேர்த்தார்.
Discussion about this post