அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 38% அதிகரித்துள்ளது.
இந்திய இளைஞர்களின் கனவு தேசமாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு தனது கல்வி மற்றும் வேலை உள்ளிட்டவற்றை அமைத்துக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 38% சதவிகிதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதேபோல முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post