திருமயம் அருகேயுள்ள பேரையூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கானாடுகாத்தான் பகுதியில் முத்தையா செட்டி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்குள்ள மரங்களை வெட்ட ஐயப்பன் என்பவர் குத்தகை எடுத்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள வாகை மரத்தை வெட்டும் பணியின் போது அங்கு சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஐயப்பன் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் அளித்தார். அங்கு வந்த அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சிலைகளை எடுத்தனர். கிருஷ்ணர், ஐயப்பன் உள்ளிட்ட 17 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து தொல்லியல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் இவை நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகநாதர் கோவிலுக்கு சொந்தமான சிலைகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Discussion about this post