அரியலூரில் 96 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மைக்கான உரம் தயாரிக்கும் கிடங்கு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் தினந்தோறும் உலர் மற்றும் ஈரக்கழிவுகளாக 14 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மறுசுழற்சி செய்ய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசு நிதியின் கீழ் 96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 76லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு உரம் தயாரிக்கும் கிடங்கு அமைப்பற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மக்கும் குப்பைகள் நுண்ணுயிர் உரமாக தயாரிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்
Discussion about this post