மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வறட்சி நிலவும் நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏரிகள், குளங்கள், உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அதே சமயம், நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை மின்மோட்டார் மூலம் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த ஆட்சியர், கோடைகாலத்தில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post