17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக பாஜக எம்.பியான வீரேந்திர குமார் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரேந்திர குமாருக்கு இடைக்கால சபாநாயகராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post