கொடைக்கானலில் மருத்துவகுணம் வாய்ந்த அவகோடா பழம் விளைச்சல் ஆரம்பித்துள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பழங்களின் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளது. முன்னதாக பிளம்ஸ் , பேரிச்சை சீசன் முடிந்த நிலையில் தற்போது அவகோடா பழம் சீசன் துவங்கியுள்ளது. இந்த பழம் ஆங்கிலத்தில் பட்டர் ஃப்ரூட் என்றும் வெண்ணெய் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அவகோடா பழத்தில் 60 வகைகள் உள்ளது . அவகோடா பழத்தை பொதுவாக அப்படியே சாப்பிடவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். மில்க் ஷேக் மற்றும் ஐஸ் க்ரீம்களில் இனிப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவகோடா பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன. இவை இதயம், தோல் மற்றும் தசைகள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும் சிறந்த நிவாரணியாக இந்த பழம் கருதப்படுகிறது.
Discussion about this post