வாயு புயல், வலு இழந்த நிலையில் குஜராத்தில் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது.
அரபிக் கடலில் உருவான வாயு புயல், கடந்த 13 ஆம் தேதி குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசைமாறி மேற்கு நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், புயல் மீண்டும் திசை மாறி குஜராத் கடற்கரைப் பகுதி நோக்கி திரும்பியுள்ளது. தற்போது வலு இழந்து தாழ்வழுத்த மண்டலமாக மாறியுள்ள வாயு புயல், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று நள்ளிரவு, குஜராத்தில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் குஜராத் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, குஜராத் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Discussion about this post