கன்னியாகுமரி மேற்கு கடலோர பகுதிகளில் மீன்வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 60 நாட்களாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. தற்போது கேரளாவிலும் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்கள் வரத்து குறைவான அளவே உள்ளதால், அங்குள்ள மேற்கு கடலோர பகுதிகளில் மீன்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகும் மழை மற்றும் காற்று அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக மீனகள் வரத்து குறைந்து விலை குறைந்து காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post