இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் வார விடுமுறையைக் கொண்டாட அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானலில் தற்போது நிலவும் இதமான குளுமையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் குவிந்து வருகின்றனர். கொடைக்கானலில் உள்ள மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்டவைகளைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பலவித வண்ண மலர்களைக் கண்டு ரசிப்பதோடு, நகரின் மையப்பகுதியில் உள்ள எரியில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களும் கொடைக்கானலில் அதிகளவில் குவிந்தனர்.
Discussion about this post