ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 47 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் 47 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இவைகளை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post