தொடர்ந்து 17வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்தது. மக்களவை தேர்தலையொட்டி விலை குறைப்பு செய்யப்பட்டதாகவும், தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் விலையேற்றம் காணப்படும் என்றும் எதிர்கட்சிகள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் தேர்தல் முடிந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக இன்றும் குறைந்து விற்கப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிப்பை வெளியிட்டுவரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 72 ரூபாய் 90 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதேபோல டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து 67 ரூபாய் 88 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
17 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 69 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 62 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post