தருமபுரி அருகே கள்ளத்துப்பாக்கிகளை பயன்படுத்தும் மலைவாழ் மக்களுக்கு காவல் ஆய்வாளர் தானே தண்டோரா அடித்து எச்சரிக்கை விடுத்த சம்பவம் காண்போர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலை உச்சியில் அமைந்துள்ள சித்தேரி கிராமம், அங்கு ஏராளமான மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் யாரேனும் சட்டவிரோதமாக கள்ளத்துப்பாக்கிகள், நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால், அதே உள்ள கோயில் முன்பு ஒப்படைக்கக்கோரி, காவல் ஆய்வாளர் கண்ணன் தானே தண்டோரா அடித்து, எச்சரிக்கை விடுத்தார். மலைவாழ் மக்களுக்கு காவல் ஆய்வாளர் தானே தண்டோரா அடித்து எச்சரிக்கை விடுத்த சம்பவம் காண்போர்களை வியப்பில் ஆழ்த்தியது.
Discussion about this post