ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, நேற்று பேசிய பிரதமர் மோடி, பேரிடர் காலத்தில் மனிதாபிமான காட்சி விரிவடைவதை நம்மால் காண முடிவதாக குறிப்பிட்டார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொருவரும் தங்களின் நிலைமைக்கேற்ப துயரங்களை களையும் வகையில் தொடர்ந்து, உதவிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். கேரள வெள்ளத்தில் உடமைகளை இழந்தவர்கள், வெள்ளம் ஏற்படுத்திய துயரத்தில் இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்பதாகவும் பிரதமர் கூறினார். 125 கோடி இந்தியர்களும் துக்கம் நிறைந்த இந்த தருணத்தில், கேரளா மக்களுடன் தோளோடு தோள் கோர்த்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பேரிடரின் தாக்கத்தில் இருந்து, கேரள மக்கள் விரைவாக மீண்டு வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய பிரதமர், உலக மொழிகளில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்பது, இந்தியாவின் பெருமை என்று புகழாராம் சூட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, தஞ்சை பெரிய கோயில், கட்டடக்கலை, பொறியியல் கலை ஆகியவற்றின் நம்ப முடியாத இணைப்பாக உள்ளது என்றும் அவர் சிறப்பித்தார்.
Discussion about this post