ஏ.என் 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதகவும் விமானப்படை அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் 32 ரக விமானம் கடந்த ஜூன் 3ம் தேதி அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப் பிரதேச மாநிலம் கெஹாவில் உள்ள விமான படை தளத்திற்கு சென்றபோது விபத்தில் சிக்கியது. 8 நாட்கள் நடைபெற்ற தீவிர தேடுதலுக்கு பிறகு லிபோ என்னும் இடத்தில் அதன் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனிடையே விமானத்தில் பயணித்த யாரெனும் உயிருடன் இருக்கிறார்களா என்பது குறித்து விமானப் படையின் சிறப்பு பயிற்சி பெற்ற 15 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரில் யாரும் உயிருடன் இல்லை என விமானப்படை அறிவித்துள்ளது. இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த 13 வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post