கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக எல்லை பகுதிகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு கேரளாவில் 17 பேரை பலி வாங்கிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சல், தற்போது கேரளாவில் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. கேரளாவில், நிபா வைரஸ் காய்ச்சல் மேலும் 15 பேருக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் தமிழக – கேரளா எல்லை பகுதிகளான நாடுகானி, சேரம்பாடி மற்றும் கக்கநள்ளா ஆகிய சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மாவட்ட சுகாதாரத்துறை 24 மணி நேரமும் முழு கண்காணிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post