மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொல்கத்தாவில், மாநில அரசால் நடத்தப்படும் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனை மருத்துவர்கள், கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி மருத்துவர் மீது, நோயாளியின் உறவினர் ஒருவர் தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு கேட்டும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நேரில் சந்தித்து, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கூறி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று மம்தா எச்சரிக்கை விடுத்தார்.
Discussion about this post