பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், அமித் ஷா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில், 6 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை பாஜக தேசிய தலைவராக அமித் ஷா தொடருவார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த 6 மாநிலங்களின் தேர்தல் முடியும் வரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷாவே தொடர உள்ளார்.
Discussion about this post