இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இலங்கை அரசாங்கம் ஒரே கல்லில் நூறு பறவைகளை கொன்று விட்டதாக விமர்சித்தார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருப்பது, மக்களின் கவனத்தை திசை திருப்பி இருப்பதாகவும், பல விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டு இருப்பதாகவும் ராஜபக்ச குற்றம்சாட்னார். தாக்குதலில் காயமடைந்தவர்களை சிறிசேனா அரசு மறந்து விட்டதாகவும் அவர் சாடினார். தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்திய ராஜபக்ச, பயங்கரவாதத்துக்கு இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று உறுதிபடக் கூறினார்
Discussion about this post