காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் 80 சதவீதம் நடைபெற்று முடிந்துள்ளதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை வருவாய் அதிகாரி சத்தியகோபால் பார்வையிட்டார். 84 கோடி ரூபாய் பதிப்பீட்டில் பாலாறு வெள்ளநீர் வடிகால் திட்டத்தில், பாபான் கால்வாயினை அகலப்படுத்தி 550 மீட்டருக்கு வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் மற்றும் இரும்புலியுர் வெள்ள உபரி நீரைப்போக்க ஆயிரத்து 305 மீட்டர் வடிகால்வாயினை அமைக்கும் பணிகள் 80சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து 60 கோடி ரூபாய் செலவில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு வருகிறது . இதில் தேக்கப்படும் 75டி.எம்.சி தண்ணீர் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் என்றும், இதற்கான பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post