வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் 4வது ஜாமின் மனு மீது லண்டன் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர், மெஹுல் சோக்சி இருவரும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பினர். இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நிரவ் மோடி மீதான நாடு கடத்தும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமின் விண்ணப்பம், நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக ஜாமின் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். இம்மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post