24 மணி நேர கடைகள் திறப்பால், ஆன்லைன் வர்த்தகம் குறையும் என்றும், கடைகளுக்கு நேரடியாக செல்வது அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் மக்களுக்கு பயனுள்ள அறிவிப்பாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேலை தேடுவோருக்கும் புதிய கதவுகளை திறந்துள்ளது. அதே நேரம் வியாபாரிகள் தரப்பில் சில கோரிக்கைகள் முன் வைக்கப்படுகிறது.
கோயம்பேடு போன்ற இடங்களில் கூடுதல் தண்ணீர் வசதி, கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பெரிய அளவில் நன்மை பயப்பதாக உள்ள அரசின் அறிவிப்பு வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
Discussion about this post