கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வால்பாறை வனச்சரகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வால்பாறை வன பகுதியில் 18 நேர் கோடு பாதையில் 9 மையம் பகுதியில் இந்த வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. முதல் மூன்று நாள் வன விலங்குகளையும் அடுத்து மூன்று நாள் வன விலங்குகள் உண்ணும் தாவரம் மற்றும் மாமிச உணவுகளையும் கணக்கெடுப்பு பணியில் நடைபெறுகிறது. இப்பணியில் வால்பாறை சரகர் சக்திகணேஷ், வன அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
Discussion about this post