மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மத்திய அரசுத் துறை செயலர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு, முதல் 100 நாட்களுக்குக்கான செயல் திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் 100 நாள் செயல் திட்டங்களை நடைமுறைபடுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. கடந்த முறை ஆட்சி அமைத்த போதும் இதே போன்றதொரு கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post