கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, வயனநாடு உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தற்போது மழை குறைந்ததையடுத்து, தற்போது அங்கு நிவாரணப் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோட்டையம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 முதல் 11 சென்டி மீட்டர் வரையே மழை அளவு பதிவாக கூடும் என்பதால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post