வத்தலக்குண்டில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் ஏராளமானோர் பங்கெடுத்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தனலட்சுமி விளையாட்டுக்கழகம், தமிழ்நாடு ஆணழகன் மற்றும் பிட்னஸ் சங்கம் இணைந்து மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டத்திற்கான போட்டிகள் வத்தலக்குண்டில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், சென்னை, விருதுநகர், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த 120 மேற்பட்ட வாலிபர்கள் இதில் பங்கேற்றனர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்திற்கான ஆணழகன் போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ஹரிஷ் வெற்றி பெற்றார்.
Discussion about this post