திருவொற்றியூரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்த இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் காமராஜ் என்பவருக்கும் வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சுப்பிரமணி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. பைக் தீப்பிடித்த போது ஏசி இயந்திரமும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசில் சுப்ரமணி புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post