உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது.
லண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 14வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சை தெறிக்கவிட்ட ஷிகர் தவான் தனது 16வது சதத்தை பதிவு செய்தார். 109 பந்துகளில் 117 ரன்கள் குவித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். விராட்கோலி 82 ரன்களில் அவுட்டாகினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 352 ரன்களை எடுத்தது.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் எடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் பும்ரா ,புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
Discussion about this post