இலங்கையில் பதற்றமான சூழல் நீடித்தால் மற்றொரு பிரபாகரன் உருவாகிவிடக் கூடும் என அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை முல்லைத் தீவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது இலங்கை பிளவுப்பட்டு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கூறினார். மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதாக கூறிய அதிபர் சிறிசேன, இதனை தொடரவிட்டால் அது இலங்கைக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்தார். இதனால் முஸ்லீம் பிரபாகரன் உருவாக இலங்கையர்கள் இடம் அளித்துவிடக் கூடாது எனவும் அவர் கூறினார். அனைவரும் ஒருங்கிணைந்து இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிறிசேன அழைப்புவிடுத்தார். கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு பிறகு அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post