அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருந்த பிரதமர், அங்கிருந்து நாடு திரும்பி திருமலை திருப்பதி கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். அங்கு பிரதமர் மோடி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் கோயிலில் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் பிரதமருடன் சென்று வழிபாடு செய்தார். இந்த நிகழ்வின் போது, பிரதமர் மோடிக்கு திருப்பதி கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Discussion about this post