திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் இந்தியில் எழுதப்பட்டுள்ள பெயர்கள் அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் மத்திய அரசு நிறுவனமான பெல், துப்பாக்கி தொழிற்சாலை, விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இந்நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்புறம் உள்ள பெயர் பலகை, பி.எஸ்.என்.எல் அலுவலக சேவை மையத்தில் உள்ள பெயர் பலகை, தலைமை தபால் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இந்தியில் உள்ள பெயர்கள் கருப்பு மையை கொண்டு அழிக்கப்பட்டன. இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக சிலர் கூறிவரும்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி பெயர்கள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post