மக்கள் மனதில் நிற்பவர்கள் அதிமுகவினர் தான் என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுகவினர் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சார்பில் ஈரோடு மக்களவை தொகுதி மற்றும் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதை 9 தொகுதி வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளதாகவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய கொடுமைகள் தொடரும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post