வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில், பாஜகவின் முக்கிய தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக பாஜகவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளதால், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த தேர்தல்கள் முடிந்ததும் கட்சித் தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. பாஜகவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் மத்திய அமைச்சராக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post